திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அருளிய ஈசன்

திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அருளிய ஈசன்
shiva-worship


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, ஈசன் கொடுத்தருளினார். இந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

உமையவளின் திருமுலைப்பாலை, தனது மூன்று வயதில் பருகி, ஞானம் வரப்பெற்ற முருகப்பெருமானின் அவதாரமான திருஞானசம்பந்தர், சீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி ஈசனின் இறையருள் கைவரப்பெற்றவர். பின்னர் அந்த மூன்று வயது பிஞ்சுக் குழந்தை சீர்காழிக்கு மேற்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோலக்கா என்று அழைக்கப்படும் திருத்தாளமுடையார் கோவிலுக்கு சென்றார். இந்த தலத்தில் இருந்துதான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையை தொடங்கினார் திருஞானசம்பந்தர்.

சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்ற திருத்தாளமுடையார் கோவிலில், தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே இறைவனை துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.

‘‘மடையில் வாளை பாய மாதரார்
 குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
 சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
 உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’’

என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயிருந்தன. தன் பிஞ்சு கரங்கள், சிவக்க, சிவக்க கைத்தாளம் இட்டு தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணம் மேலோங்க அவருக்கு உதவ முன்வந்தார். அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, ஈசன் கொடுத்தருளினார்.

ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக அம்பிகை அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த கோவிலில் ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் புதிய சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து விட்டு, அம்மனின் பழைய சிலையை அகற்றிவிட்டனர். ஆனால் அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும் அகற்றாமல் மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து இன்றும் பூஜித்து வருகிறது.

அழகும், அமைதியும் ஒருங்கே நிலவும் அதிஅற்புத திருத்தலமான திருக்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிக்கப் பட்டுள்ளது.

ஒரு முறை தனது வாய் பேச முடியாத மகனை இந்தத் தலத்திற்கு அழைத்து வந்து ஓசை கொடுத்த நாயகி அம்மனிடம் வேண்டிக் கொண்டாள் ஒரு பெண். என்ன ஆச்சரியம்! சில தினங்களிலேயே அந்த சிறுவன் பேசத் தொடங்கினான். உடனே 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை அந்தப் பெண் இந்த கோவிலுக்கு அளித்துள்ளார்.

இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்கு சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்த சிறுவன் பேச தொடங்கினார். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்த கோவிலுக்கு அளித்துள்ளனர். இவ்வாறு அம்மனின் அருளால் வாய் பேச வந்தவர்கள் இதனை தங்களின் முழு முகவரியுடன் ஆலயத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர் களின் எண்ணிக்கை 200–க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி.

வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற தேவார பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

கோவில் அமைப்பு:

மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிறார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சன்னிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.

இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சன்னிதி இருக் கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சன்னிதியை அடுத்து மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். ஓசைகொடுத்த நாயகியின் சன்னிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சன்னிதியை அடையலாம். தல விருட்சமாக கொன்றை மரம் உள்ளது.